From Wikipedia, the free encyclopedia

புதுயுகன் (கவிஞர்). தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு, புதினம் உள்ளிட்ட பல இலக்கிய வடிவங்களில் இயங்கி வருகிற பன்முகப் படைப்பாளர்.

'Outstanding Leadership Award' received from Education 2.0 at Dubai
சர்வதேச கல்வி மாநாட்டில் 'தலைசிறந்த தலைமை விருது'

இந்தியாவில் பிறந்த இவர், 23 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வருகிறார். இவர் கல்வியாளர் மற்றும் கணிப்பொறியாளரும் ஆவார். இலண்டனில் UKHE Consultants Ltd. என்ற தனது உயர்கல்வி ஆலோசனை நிறுவனத்தின் இயக்குனராக தற்போது இயங்கி வருகிறார். இங்கிலாந்தில் ராம் கள்ளபிரான் என்று அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு:

திருநெல்வேலி, இந்தியாவில் பிறந்த புதுயுகன் (ஏப்ரல் 5, 1972) சென்னை கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி போன்ற பள்ளிகளில் பயின்று நாலாட்டின்புதூர் நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரியில் கணிப்பொறி பொறியாளராக பட்டம் பெற்றார். இங்கிலாந்து கிரீன்விச் பல்கலைக்கழகத்தில்,  கணிப்பொறியிலும், உயர்கல்வியிலும் முதுகலை பட்டங்கள் பெற்றார்.  

இலக்கிய பணி:

புதுயுகன் சிறுகதை, புதினம், கட்டுரை, ஆய்வு, மரபு மற்றும் புதுக்கவிதை முதலிய இலக்கிய வகைகளில் எழுதி வருகிறார்.

தமிழ்நாடு அரசு அயலகத்தமிழர் தினம் 2024ல் இவர் எழுதிய ‘மிஞிலி, பிராட்டி, மூகுள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டது. ‘ஒளி உறுமும் கான்’ கவிதை நூலும் அறிமுகமானது. படைப்புத்திறனைப் பாராட்டி தமிழ்நாடு அரசு பாராட்டுச்சான்றுகள் வழங்கியது.

1994ல் ‘குமுதம்’ இதழில் வெளியான ' தாய்மை' குறுங்கதையின் மூலம் இவரது இலக்கிய வாழ்வு தொடங்கியது. அடுத்து, கணையாழி, கல்கி உட்பட பல பத்திரிகைகளில் இவரது சிறுகதைகளும், குறுநாவலும் வெளியாகின.   இலண்டன் நேரு சென்டரில் வெளியாகி, ப்ளெமிஷ் மொழியில் பெயர்க்கப்பட்டு, லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் இடம் பெற்றிருக்கிறது  இவரது ‘Air, Fire & Water’ [On Vedaranyam Salt Satyagraha] என்ற நூல்.

இவரது சமுத்திர சங்கீதம்' [Magical Realism] என்ற புதினத்தை குருகுலம் பதிப்பகம் வெளியிட,  ‘கதவு இல்லாத கருவூலம்', 'மடித்து வைத்த வானம்', ‘மழையின் மனதிலே' கவிதை நூல்களை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டது.

2019ல் ‘கவிதை உறவு’ விருது வென்ற ‘கனவும் வெற்றியும் பேசிக் கொண்டவை’ என்ற தன்னம்பிக்கை நூல், வானதி பதிப்பக வெளியீடாக, மதுரையில் வெளியானது.

முக்கிய படைப்புகள்:

ஆய்வுகள் மற்றும் உரைகள்:

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிலே ‘மாயா யதார்த்தத்தின் புதிய கீற்றுகள்' [2010], அமெரிக்காவில் கலிபோர்னியா தமிழ்க் கழக மாநாட்டில், 'மின்வழிக்கற்றல்' [2012], கம்பன் விழாக்களில் ஆய்வு என்று பல ஆய்வுகளைச் சமர்பித்திருக்கிறார்.

இவரது  மின்தமிழ்’ என்ற ஆய்வுநூலை உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை வெளியிட்டது.

இலண்டன் உயர்கல்வித்துறையில் பணிகளும் சாதனைகளும்:

கணிப்பொறியாளராக இலண்டனுக்குச் சென்ற இவர் உயர்கல்வித்துறைக்கு மாறி கல்லூரி ஆசிரியராக பணியேற்று பதவி உயர்வுகள் பெற்று கல்லூரி பதிவாளராக, துணை முதல்வராக தலைமைப் பதவிகள் வகித்தார். பல்லாண்டுகள் இலண்டன் கல்லூரிகளிலும், University College London உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும் சிறப்புற பணியாற்றி சர்வதேச மாணவர்களின், உயர்கல்வித் துறையின் வளர்ச்சிகளுக்குப் பங்காற்றினார்.   

2020ஆம் ஆண்டில் தனது சொந்த உயர்கல்வி நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

கல்வி தரமேலாண்மை நிபுணத்துவம், இங்கிலாந்து உயர்கல்வி அகாதெமியின் சான்றோன் (Senior Fellow of Higher Education Academy, UK) என்ற அங்கீகாரம் பெற்றவர்.

மேலும்  உயர்கல்வித்துறையில் புதிய கற்றல் கற்பித்தல் முறைகளையும், ஆளுமைக்குமிழ் என்ற ஆளுமை / கல்வி உளவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளையும் செய்தவர். தனது கண்டுபிடிப்பை ஆய்வாக Advance HE சர்வதேச கல்வியாளர்கள் மாநாட்டில் சமர்ப்பித்தார்.

வென்ற பரிசுகள் மற்றும் விருதுகள்:

Education 2.0, நிறுவனம் 2024ல் துபாயில் நடத்திய சர்வதேச கல்வியாளர்கள் மாநாட்டில் இவருக்கு தலைசிறந்த தலைமை விருது [Outstanding Leadership Award] வழங்கி இவரது நீண்ட கல்விச்சேவைகளைப் பாராட்டியது.

  • 2019: "கவிதை உறவு" இலக்கிய இதழ் பரிசு - "கனவும் வெற்றியும் பேசிக் கொண்டவை" நூலுக்கு
  • 'எழுத்து' தளத்தில் இவரது கவிதைகள் முதற்பரிசுகள் வென்றன: ' தாயே தமிழே தனயனின் வாழி', ' வின் ஞானம்'
  • 2013ஆம் ஆண்டில் காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவில் சிறந்த ஆய்வுகளில் ஒன்றாக இவரது கட்டுரை பரிசு வென்றது.

சமூக ஊடங்கங்களில், வலைமனைகளில்:

பிற குறிப்பிடத்தக்க விவரங்கள்:

  • புதுயுகன் நவீனயுகத்தின் பொருண்மைகள், பேதமற்ற சமூகம் போன்ற கருத்துகளை தன் எழுத்துகளில் வலியுறுத்துகிறார்.
  • உலகின் அறிவுத்தலைமையை இந்தியா ஏற்கவேண்டும் என்ற நீள்கனவை தன் எழுத்துகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
  • புதுயுகன் பற்றிய கட்டுரைகள் மற்றும் நூல்கள்:

ஊடகங்களில்: